உள்ளூர் செய்திகள்

நாய்கள் பிடிக்கப்பட்டன.

சாலைகளில் சுற்றி திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன

Published On 2022-07-31 10:11 GMT   |   Update On 2022-07-31 10:11 GMT
  • நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து விடப்பட்டன.
  • நகரில் சுற்றித்திரிந்த நாய்களை வாகனங்களில் பிடித்து மயிலாடுதுறை கால்நடை மருத்துவமனைக்கு கருத்தடை செய்ய கொண்டு சென்றனர்.

சீர்காழி:

சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிகின்ற நாய்களை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன், சீர்காழி நகரில் சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி முதல் கட்டமாக 50 -க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து விடப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக சீர்காழி நகரில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது. பப்ளிக் பார் அனிமல் அமைப்பினர் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கொண்ட குழுவினர் நகரில் சுற்றித்திரிந்த 40-க்கும் மேற்பட்ட நாய்களை வாகனங்களில் பிடித்து மயிலாடுதுறை கால்நடை மருத்துவமனைக்கு கருத்தடை செய்ய கொண்டு சென்றனர். கருத்தடைக்கு பின்னர் மீண்டும் அந்த நாய்கள் சீர்காழி நகரப் பகுதியில் பிடிக்கப்பட்ட இடத்தில் விடப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News