வனவிலங்குகளை பாதுகாக்க அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது- நீலகிரி கலெக்டர் அருணா அறிவுறுத்தல்
- காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை 2 மணிநேரமும் பட்டாசுகள் வெடிக்க நடவடிக்கை
- ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் விழிப்புணர்வு பேரணி
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பொதுமக்கள் தீபாவளி யன்று பட்டாசுகளை வெடித்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட பகுதியில் ஒலி மாசு ஏற்படும். செவிதிறன் குறையும் வாய்ப்பு ஏற்படும்.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உயிர்க்கோளப்பகுதி என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு வசிக்கும் பொதுமக்கள் தீபாவளி நேரத்தில் வனவிலங்குகள் மற்றும் அரியவகை தாவரங்கள் ஆகியவற்றை பாதுகாக்க முன்வர வேண்டும்.
தீபாவளி அன்று பொதுமக்கள் காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. எனவே நீலகிரி மாவட்ட த்தில் அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பட்டாசு கள் வெடிக்க வேண்டும். மேலும் அதிகஓசை எழு ப்பும் தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்டவர்களின் விற்பனை உரிமை ரத்து செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக வனத்துறை சார்பில் மாசற்ற தீபாவளி குறித்த விழிப்புணர்வு பேரணி ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் நடந்து. இதில் கலெக்டர் அருணா கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் தொடங்கிய பேரணி, மத்திய பஸ் நிலையத்தில் முடிந்தது. அப்போது பேரணியில் நடங்கேற்ற வர்கள் பட்டாசு வெடிக்க மாட்டோம், காற்று மாசு இல்லாமல் கட்டுப்படுத்து வோம், ஒலிமாசுவை கட்டுப்படுத்துவோம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட வன அதிகாரி (ஊட்டி) கவுதம், உதவி வனபாது காவலர் தேவராஜ், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், ஊட்டி நகராட்சி பொறியாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டார்.