உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தீபக்ஜேக்கப்.

வீடு வீடாக சென்று வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணி

Published On 2023-08-03 10:27 GMT   |   Update On 2023-08-03 10:27 GMT
  • குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
  • விவரங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த 21-7-2023 முதல் தொடங்கப்பட்டு 21-8-2023 முடிய நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க, 1-1-2024 -ஐ தகுதி நாளாகக் கொண்டு தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2024-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக முன் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பது, பெயர் நீக்கம் செய்வது, அனைத்து திருத்தங்கள் மேற்கொள்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன் வாக்குச்சாவடிகளை பிரிப்பது, இடமாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் போன்ற பணிகள் நடைபெறவுள்ளது.

முதற்கட்ட பணியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த 21-7-2023 முதல் தொடங்கப்பட்டு 21-8-2023 முடிய நடைபெறவுள்ளது.

இப்பணியினை சிறப்பாகவும் விரைவாகவும் முடித்து தூய வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு பொது மக்கள் தங்கள் பகுதிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 5-1-2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News