தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலத்தில் மழைக்காலத்திற்கு முன் வடிகால் அமைக்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க. மனு
- தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் மனு அளித்தனர்.
- மழைநீர் மற்றும் கழிநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக மனுவில் கூறியுள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் 51-வது வார்டு இந்திராநகர், திரு.வி.க.நகர், ஜே.ஜே.நகர் ஆகிய பகுதிகளில் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் மற்றும் கழிநீர் அங்கேயே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ஆகையால் பருவ மழைக் காலத்திற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் முறையான வடிகால் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், பொதுச்செயலாளர் உமரிசத்தியசீலன், மாவட்ட துணைத்தலைவர்கள் வாரியார், தங்கம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், தெற்கு மண்டல தலைவர் மாதவன், வடக்கு மண்டலம் வினோத், மேற்கு மண்டலம் சிவகணேஷ், 51-வது, வார்டு தலைவர் சங்கர நாராயணன் மற்றும் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ரஞ்சனா, செல்வராணி, காளிராஜா, முருகன், தெற்கு மண்டல பொதுச்செயலாளர் மகேஷ் பாலகுமார் துணை தலைவர் பொய் சொல்லான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.