கடலூர் மாநகராட்சியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி:அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
- லெனின், இளைஞரணி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட் பட்ட முதுநகர் பகுதியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
கலெக்டர் அருண்தம்பு ராஜ், மாநகராட்சி மேயர் சுந்தரி, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜய லட்சுமி செந்தில், பால சுந்தர், மாவட்ட பிரதிநிதி கள் துர்கா செந்தில், மஸ்கட் புகழேந்தி, பகுதி துணை செயலாளர்கள் வக்கீல் பாபு, லெனின், இளைஞரணி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.