தென்காசியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
- தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திராவிட மாடல் பயிற்சி கலந்தாய்வு கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திராவிட மாடல் பயிற்சி கலந்தாய்வு கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.
தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இலத்தூர் ஆறுமுகச்சாமி வரவேற்றுப் பேசினார் . இந்த நிகழ்ச்சியில் மாநில சுயாட்சி குறித்து தி.மு.க.மாநில தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளர் கோவை லெனின், திராவிட இயக்க வரலாறு குறித்து அயலக தி.மு.க.தொடர்பு இணைச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா. எம்.பி ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள்.
இக்கூட்டத்தில் தென்காசி நகர தி.மு.க. செயலாளர் ஆர்.சாதிர், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் எம்.ஏ.எம்.ஷெரீப், ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எம்.அழகு சுந்தரம், க.சீனித்துரை, எம்.பி.எம்.அன்பழகன், சுரண்டை நகர திமுக செயலாளர் வே.ஜெயபாலன், பேரூர் தி.மு.க. செயலாளர்கள் மேலகரம் இ.சுடலை, குற்றாலம் குட்டி, இலஞ்சி மு.முத்தையா, சுந்தரபாண்டிபுரம் பண்டாரம், மாலை அமைப்பாளர்கள் ஜேசுராஜன், குற்றாலம் இரா.பேச்சி முத்து, உதயநிதி நற்பணி மன்ற துணைச் செயலாளர் சிவ அருணன், வீராணம் சேக் முகமது, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீவநல்லூர் சாமித்துரை, குற்றாலம் சுரேஷ், கண்ணன், செல்வம், தென்காசி நகர தி.மு.க. நிர்வாகிகள் சி.மணிமாறன், அ.சேக்பரீத், பால்ராஜ், த.ராமராஜ், நா.பாலசுப்பிரமணியன், ரஹ்மத்துல்லா, தொண்டரணி பரமசிவன், உ.இசக்கித்துரை, வடகரை ராமர், பழக்கடை கோபால் ராம், சே.தங்கப்பாண்டியன், ராம்துரை, வெங்கடேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி பாசறை கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் அனைவரும் வெள்ளை நிற சீருடை அணிந்து கலந்து கொண்டனர்.
முடிவில் தென்காசி மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் சே. தங்கப் பாண்டியன் நன்றி கூறினார்.