தஞ்சையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமை தாங்கினார்.
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சம் 100 மருத்துவ மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமை தாங்கினார்.
முன்னதாக தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி அனைவரையும் வரவேற்றார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் குணசேகரன், காப்பாளர்கள் ஜெயராமன் அய்யனார், தலைமை அமைப்பாளர் குருசாமி, மாவட்ட தலைவர்கள் நிம்மதி வீரையன், மாவட்ட செயலாளர்கள் சிதம்பரம், துரைராஜ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராமப்புற பிரச்சார மாநில அமைப்பாளர் அன்பழகன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
முடிவில் தஞ்சை மாநகர தலைவர் நரேந்திரன் நன்றி கூறினார்.
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.