உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும்- ராஜா எம்.எல்.ஏ. தகவல்

Published On 2023-05-02 08:31 GMT   |   Update On 2023-05-02 08:31 GMT
  • 26 இடங்களில் தண்ணீர் செல்லும் பாதைகளில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.
  • வேறு குடிநீர் ஆதாரங்கள் இல்லாததால் புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தொகு திக்குட்பட்ட சங்கரன்கோவில் ஒன்றியம், மேலநீலிதநல்லூர் ஒன்றியம், குருவிகுளம் ஒன்றியம், மானூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 26 இடங்களில் தண்ணீர் செல்லும் பாதைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விநியோகம் சீராக செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். மேலும் சங்கரன்கோவில் நகரத்தை பொறுத்தவரை புதிய குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அதனையும் விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் சங்கரன்கோவில் தொகுதி என்பது 100 சதவீத நிலத்தடி நீர் இல்லாத பகுதி என அரசாணை எண் 155-ல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் வேறு குடிநீர் ஆதாரங்கள் இல்லாததால் புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

இது குறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உடனடியாக உடைப்புகள் சரி செய்யப்பட்டு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனால் சங்கரன்கோவில் தொகுதியில் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News