தேங்கியுள்ள மழைநீரில் கொசு உற்பத்தியை தடுக்க ஆயில் பந்துகள் வீச்சு
- ‘லார்வா’ புழுக்களை ஒழிக்க எண்ணை பந்துகளை வீச உத்தரவிடப்பட்டது.
- தேவையற்ற பொருள்கள் உள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவு படி, துணை கமிஷனர் தானுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைபடி மாநகர பகுதிகளில் உள்ள காலி மனைகள், குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீரால் உற்பத்தியாகும் 'லார்வா' புழுக்களை ஒழிக்கும் வகையில், எண்ணை பந்துகளை வீச உத்தரவிடப்பட்டது.
அதன் படி மேலப்பாளையம் உதவி கமிஷனர் (பொறுப்பு ) காளிமுத்து, சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாள நடராஜன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை முதல் மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியை தடுக்க ஆயில் பந்துகளை வீசினர்.
மேலும் வீடுகள், பள்ளிகள் அருகில் கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள இடங்களான பிளாஸ்டிக் பொருள்கள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருள்கள் உள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதபோல் டெங்கு தடுப்பு பணியாளர் மூலமாக கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கொசு புழுக்களை அழிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.