கோவையில் குடிபோதையில் கூலித்தொழிலாளி குத்திக்கொலை
- பெட்ரோல் பங்க் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
- முனியப்பன் சிங்காநல்லூரில் பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
குனியமுத்தூர்,
கோவை வெள்ளலூர் அருகே உள்ள வள்ளி யம்மைபுரம் கக்கன் வீதியை சேர்ந்தவர் கோபிநாத் (வ யது 30). கூலித்தொழிலாளி.
இவரது மனைவி ஜோதி(28). இவர்களுக்கு ராஜேஷ்குமார்(10) என்ற மகன் உள்ளார்.
முல்லை நகரை சேர்ந்தவர் முனியப்பன்(25). சிங்காநல்லூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
கோபிநாத்தும், முனியப்ப னும் நண்பர்கள்.
இவர்கள் வார இறுதி நாட்களில் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். அதன்படி நேற்று கோபிநாத், முனியப்பன் ஆகியோர், மது வாங்கி வந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினர்.
பின்னர் அனைவரும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போ து மதுரைவீரன் கோவில் அருகே உள்ள பொதுக ழிப்பிடம் பகுதியில் வந்த போது, நண்பர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு சத்தம் போட்டனர்.
சிறிது நேரத்தில் கோபிநாத், முனியப்பனை தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.இவர்கள் 2 பேரும் அங்கு நின்று கொண்டு தொடர்ந்து வாய்த்தகராறில் ஈடுபட்ட னர். மேலும் ஒருவருக்கொ ருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த முனியப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபிநாத்தை சரமாரியாக குத்தினார்.
இதில் பலத்த காயம் அடைந்த கோபிநாத் ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே சரிந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள், பொதுமக்கள் பார்த்து ஓடி வந்தனர். மக்கள் வருவதை பார்த்ததும் முனியப்பன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதையடுத்து பொது மக்கள் கோபிநாத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி தலை மறைவான முனி யப்பனை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவையில் பதுங்கி இருந்த முனி யப்பனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.