உள்ளூர் செய்திகள்

அரசு கொள்முதல் நிலையத்தில் தேக்கமடைந்துள்ள நெல்.

தொடர் மழையால் அரசு நெல் கொள்முதல் செய்யும் பணிகள் பாதிப்பு

Published On 2023-06-21 10:22 GMT   |   Update On 2023-06-21 10:22 GMT
  • கோடை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் பணி நடைபெற்றது.
  • நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல்செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டத்தில் தற்போது கோடை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை தங்கு தடையின்றி கொள்முதல் செய்வதற்காக இரும்புதலை, ரெங்கநாதபுரம், பொன்மான்மேய்ந்தல்லூர், சாலியமங்களம், கோவத்த குடி, கொத்தங்குடி, நிம்மேலி, காந்தாவனம், ராராமுத்திரகோட்டை உள்பட பல பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல்கொள்முதல் செய்யு ம்பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருவதால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல்செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளதோடு மழை பொழிவு காரணமாக நெல் அறுவடை செய்யும் பணியும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News