உள்ளூர் செய்திகள் (District)

நீர்வரத்தின்றி கருகி வரும் இளம் நெற்பயிர்கள்.

தண்ணீர் இல்லாததால் சம்பா நெற்பயிர்கள் கருகும் அவலம்

Published On 2022-09-19 10:10 GMT   |   Update On 2022-09-19 10:10 GMT
  • வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததாலும் விவசாயிகளே தங்கள் முயற்சியால் வாய்க்காலை சுத்தப்படுத்தினர்.
  • சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு நேரடி தெளிப்பு முறையில் சம்பா சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த நாணலூர் என்ற இடத்தில் கோரை ஆற்றிலிருந்து, புதுப்பாண்டி ஆறு பிரிகிறது.

நடப்பாண்டில் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக மழை பெய்ததால் தாழ்வான பகுதியில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் குறைத்து கொடுக்க ப்பட்டதன் அடிப்படையில், புதுப்பாண்டி ஆற்றுக்கு தண்ணீர் பிரித்து கொடுக்க வில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறுவை சாகுபடியை மே ற்கொள்ளாத விவசாயி கள் ஒருபோக சம்பா சாகுபடியை மட்டும் தொடங்கினர். மீனம்பநல்லூரில் உள்ள சாலுவனாறு தடுப்பணை கதவுகள், சட்டர்ஸ் ரெகுலேட்டர்கள் பழுதடைந்து வேலை செய்யாததாலும் வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததாலும் விவசாயிகளே தங்கள் முயற்சியால் வாய்க்காலை சுத்தப்படுத்தினர்.

முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் கடைமடை பகுதியான இப்பகுதிக்கு தண்ணீர் வராததால் தற்போது புதுப்பாண்டி ஆற்றை நம்பி உள்ள வங்கநகர், வெள்ளங்கால், ஓவரூர், எழிலூர், இளநகர், பாண்டிக்கோட்டகம், குன்னலூர், மாங்குடி, மருதவனம், வேப்பஞ்சேரி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு நேரடி தெளிப்பு முறையில் சம்பா சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.

தற்சமயம் இந்த சம்பா நெற்பயிர்கள் 30 நாட்கள் வயதுடைய நிலையில் உள்ளன.

இவை அனைத்தும் தண்ணீரின்றி கருகி வருகின்றது.

எனவே, சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து கருகி வருகின்ற பயிரை காப்பாற்ற நடவடி க்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News