குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா : சென்னை, கோவையில் இருந்து சிறப்பு அரசு பஸ் இயக்க வேண்டும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தி.மு.க.வினர் கோரிக்கை
- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழா வாகும்.
- மனுவைபெற்றுக் கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்ப ந்தப்பட்ட போக்கு வரத்துதுறை அதிகாரி களிடம் கலந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கபடும் என்று கூறினார்.
உடன்குடி:
உடன்குடி கிழக்குஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூ ராட்சி கவுன்சிலர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மற்றும் தி.மு.க. வினர், தமிழக மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழா வாகும். உலக நாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கோவி லுக்கு வந்து செல்வார்கள். பக்தர்களின் வசதிக்காக திருவிழாவில் முக்கிய நாட்களான வருகிற 22, 23,24.25 ஆகிய தேதிகளிலும், பக்தர்கள் திரும்பிச் செல்வ தற்கு வசதியாக 26, 27, 28 ஆகிய நாட்களில் மொத்தம் 7 நாட்கள் தமிழகத்தில் முக்கிய ஊர்களான சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் உடன்குடி பகுதிக்கு சிறப்பு அரசு பஸ்களை மதுரை, தூத்துக்குடி, நெல்லை வழியாக இயக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மனுவைபெற்றுக் கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்ப ந்தப்பட்ட போக்கு வரத்துதுறை அதிகாரி களிடம் கலந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கபடும் என்று கூறினார்.