உள்ளூர் செய்திகள்

வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமல்

Published On 2023-01-10 04:32 GMT   |   Update On 2023-01-10 04:32 GMT
  • செயற்கை நூலிழை துணிகள் மற்றும் ஆடைகள் உற்பத்திக்காக பல்வேறு சலுகைகளை அரசு வழங்கியுள்ளது.
  • ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில் சார்பில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

அவிநாசி :

திருப்பூரில் ஏற்றுமதி வர்த்தகத்தில் இளம் ஏற்றுமதியாளர்களை ஊக்குவித்து வர்த்தக வாய்ப்புகளை அதிகம் ஈர்க்கும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இளம் ஏற்றுமதியாளர் துணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் சந்திப்பு கூட்டத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தென்மண்டல பொறுப்பாளர் சக்திவேல் பேசியதாவது:- செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது. இதுதொடர்பாக ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில் சார்பில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

அதில் உலகளாவிய தேவை மற்றும் வாய்ப்புகள் குறித்து அறிந்து அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. செயற்கை நூலிழை துணிகள் மற்றும் ஆடைகள் உற்பத்திக்காக பல்வேறு சலுகைகளை அரசு வழங்கியுள்ளது.

அத்திட்டத்தின் இரண்டாம் பகுதி ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சிறு, குறு உற்பத்தியாளர்களும் பயன் பெறுவர். ஏற்கனவே ஆஸ்திரேலியாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்த சூழலில் அடுத்த சில மாதங்களில் கனடா மற்றும் பிரிட்டன் நாட்டுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகும்.

இதன் மூலம் வர்த்தகம் நிச்சயம் பல மடங்கு அதிகரிக்கும். அதற்கேற்ப நாம் நம்மை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News