உள்ளூர் செய்திகள்

விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ பேசிய காட்சி

புதியம்புத்தூரில் கல்வி கலைத்திருவிழா -சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-12-01 08:56 GMT   |   Update On 2022-12-01 08:56 GMT
  • ஓட்டப்பிடாரம் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் கல்வி கலைத்திருவிழா நடைபெற்றது.
  • ஓட்டப்பிடாரம் வ.உ.சி.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி கலைத் திருவிழாவை சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

புதியம்புத்தூர்:

ஓட்டப்பிடாரம் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் கல்வி கலைத்திருவிழா நடைபெற்றது.

ஒன்றியத்துக்கு உட்பட்ட 22 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்காக, ஓட்டப்பிடாரம் வ.உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளி, குறுக்கு சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, புதியம்புத்தூர் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கட்டுரை,பேச்சு, இசை ,ஓவியம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றது.

ஓட்டப்பிடாரம் வ.உ.சி.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி கலைத் திருவிழாவை சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ- மாணவிகளை குத்துவிளக்கு ஏற்ற வைத்து மகிழ்ந்தார்.

இதையடுத்து எம்.எல்.ஏ. பேசுகையில், மாணவ -மாணவிகள் கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்று முயற்சி செய்து மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வெற்றி பெற்று தேசிய அளவில் பங்கேற்று வெற்றி பெறும் அளவிற்கு முயற்சி ெசய்ய வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ஓட்டப் பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா, கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா தேவி, சண்முகராஜ், வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மேரி, பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வ நாயகம், வட்டார கல்வி அலுவலர்கள் பவணந்தி ஈஸ்வரன், சரஸ்வதி, மகாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டன

Tags:    

Similar News