உள்ளூர் செய்திகள்

நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு

Published On 2022-08-09 10:32 GMT   |   Update On 2022-08-09 10:32 GMT
  • மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு அந்த நகலை தீ வைத்து எரித்தனர்.
  • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீவைக்கப்பட்ட சட்ட நகல் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

தஞ்சாவூர்:

மின்சார சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்க நிர்வாகிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள புது ஆற்று பாலம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோசங்களை எழுப்பியவாறு அந்த நகலை தீ வைத்து எரித்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீவைக்கப்பட்ட சட்ட நகல் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

Tags:    

Similar News