உள்ளூர் செய்திகள் (District)

கலெக்டர் தீபக் ஜேக்கப்.

மணிமேகலை விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-06-19 10:15 GMT   |   Update On 2023-06-19 10:15 GMT
  • 2022-23-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்புற கூட்டமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 2022-23 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளலிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருது வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மணிமேகலை விருது பெற தகுதியுள்ள சுயஉதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்புறங்களில் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை முறையான கூட்டம் நடத்துதல், சேமிப்பு செய்ததை முறையாக சேமித்தல், வங்கி கடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருத்தல், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும், மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த வட்டார இயக்க மேலாளரிடமும், நகர்ப்புற சமுதாய அமைப்புகள் சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, சமுதாய அமைப்பாளர்களிடம் தொடர்புகொண்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News