திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்
- கருத்தரங்கை கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
- சையது முகமது கலந்து கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுப்பணிகள் பற்றிய விளக்க உரையாற்றினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆதித்தனார் கல்லூரி வேலைவாய்ப்பு மையமும் இணைந்து வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கை கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். வேலைவாய்ப்பு மைய பொறுப்பாளர் சேகர் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட தலைமை வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது கலந்து கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுப்பணிகள் பற்றிய விளக்க உரையாற்றினார். மேலும், அப்பணிகளுக்கு எவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பிப்பது என்பது பற்றியும் தெளிவாக விளக்கி கூறினார். தொடர்ந்து ேபசிய அவர், அனைத்து போட்டி ேதர்வுகளையும் ஒரே நேரத்தில் எழுதாமல் முறையான தேர்வினை தேர்ந்தெடுத்து முழு முயற்சியோடு பாடத் தொகுப்பினை நன்கு படித்து தேர்வு எழுதினால் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற முடியும் என்று மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டினார். வேதியியல் துறை தலைவர் கவிதா நன்றி கூறினார். கருத்தரங்கில் இளநிலை 3-ம் ஆண்டு மாணவர்களும், முதுகலை 2-ம் ஆண்டு மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.