வடலூர் நகராட்சியில் "என்குப்பை எனது பொறுப்பு" விழிப்புணர்வு பேரணி
- வடலூர் நகராட்சியில் “என்குப்பை எனது பொறுப்பு” விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- தூய்மையான இந்தியாவை உருவாக்குக்வோம், விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கடலூர்:
வடலூர் நகராட்சியில் என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகரமன்றதலைவர் சிவக்குமார் விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.நகராட்சி ஆணையாளர் பானுமதி முன்னிலை வகித்தார்.எனது குப்பை எனது பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.தூய்மையான இந்தியாவை உருவாக்குக்வோம், விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இப்பேரணி வடலூர்நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி வள்ளலார்சபை பஸ்நிறுத்தம் வரை சென்று, வடலூர் நான்கு முனைசந்திப்பு வழியாக சென்று மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது.பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் முழக்கங்களுடன் கையில் பதாகை ஏந்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இதில் மேலாளர் (பொறுப்பு) முத்துராமன், துப்புரவு ஆய்வாளர் பாக்கியநாதன், துப்புரவு மேற்பார்வையாளர் ஆறுமுகம், தூய்மை பாரத இயக்க மேற்பார்வையாளர் திவ்யா, பரப்புரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.