சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி: நெடுஞ்சாலைத் துறையினர் அதிரடி
- சிதம்பரம் ரத வீதிகள் மற்றும் சுற்றியுளள பகுதி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
- நெடுஞ்சாலைத் துறையினரால் அகற்றப்படுமென வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்:
கோவில் நகரமான சிதம்பரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதாமேனன் தலைமையில் வர்த்தக சங்கத்தினர், சிதம்பரம் நகராட்சியினர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுநல அமைப்பினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் ரத வீதிகள் மற்றும் சுற்றியுளள பகுதி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நெடுஞ்சாலை த்துறை உதவி பொறி யாளர் விஜய ராகவன் தலைமை யிலான ஊழியர்கள் ஜே.சி.பி. பொக்லைன் எந்திரங்க ளின் உதவியுடன் சிதம்ப ரம் ரத வீதிகளில் உள்ள சாலைகளில் ஆக்கிரமி ப்புகளை அகற்றும் பணியில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாவிட்டால், நெடு ஞ்சாலைத் துறையினரால் அகற்றப்படுமென வருவாய்த் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.