ரோட்டோரம் ஆம்னி பஸ் கவிழ்ந்து 12 பேர் படுகாயம்
- திடீரென பஸ் நிலை தடுமாறி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.
- இதில் பஸ் சேதமடைந்து முன் பக்க கண்ணாடி உடைந்து நொருங்கியது.
பெருந்துறை:
கோவையில் இருந்து நேற்று இரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. இதில் 36 பேர் பயணம் செய்தனர்.
அந்த ஆம்னி பஸ் நள்ளிரவு 12 மணி அளவில் பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை பவானி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது திடீரென பஸ் நிலை தடுமாறி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் சேதமடைந்து முன் பக்க கண்ணாடி உடை ந்து நொருங்கியது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர்.
இதில் பஸ்சில் பயணம் செய்த திருப்பூரை சேர்ந்த பரமேஸ்வரன் (37), திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ மாணிக்கம் (52), திரு வண்ணாமலையை சேர்ந்த தீபன் (28), கோவையை சேர்ந்த குமரேசன் (51), கிருஷ்ணகிரியை சேர்ந்த உதயகுமார் (37), கோவையை சேர்ந்த ஸ்ரீ வீரகாஷினி (23), நந்தினி (36), சுகனேஸ்வரி (44), சந்திப் (10), ராஜலட்சுமி (74), சாய் கிருஷ்ணா (23), கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேஷ் (35) என 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த வர்கள் மீட்கப்பட்டு பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.