உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 12 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

Published On 2023-08-03 09:09 GMT   |   Update On 2023-08-03 09:09 GMT
  • கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 12 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
  • கோழி கழிவுகளை கொண்டு மின் சாரம் தயாரிக்கப்படுகிறது.

கோபி,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலா ண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழி வுகள் சேகரம் செய்யப்ப டுகிறது. இதில் 9 டன் மக்கும் கழிவுகளை இயந்திர த்தில் அரைத்து தொட்டி களில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவ ற்றை குறைந்த விலைக்கு விவசாயி களுக்கு வழங்க ப்படுகிறது. 3 டன் அதிக ஈரப்பதம் உள்ள உணவு கழிவுகள், பழ கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை கொண்டு மின் சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரத்தைக் கொ ண்டு இயந்திரங்கள் இயக்க ப்படுகிறது. மக்காத மறுசுழ ற்சிக்கு பயன்படும் சில வகையான கழிவுகளை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் அடைகி ன்றனர்.

மக்காத மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பேப்ப ர்கள் போன்றவற்றை மா ற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனு ப்பி வைக்கப்படுகிறது. தற்போது 12 டன் பிளா ஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்க ப்பட்டது. இதுவரையிலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து 3 ஆயிரத்து 250 டன் பிளா ஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனு ப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.

Tags:    

Similar News