உள்ளூர் செய்திகள்

1,500 மெ.டன் யூரியா உரம், 300 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரம் வந்தடைந்தது

Published On 2022-11-20 09:14 GMT   |   Update On 2022-11-20 09:14 GMT
  • சென்னை மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தின் யூரியா 1500 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 300 மெட்ரிக் டன்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களில் போதிய அளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் நடவுப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் மானா வாரி மக்காச்சோளமும், இதர பகுதிகளில் நிலக்கடலை, கரும்பு, மஞ்சள், வாழை, மரவள்ளி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னை மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தின் யூரியா 1500 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 300 மெட்ரிக் டன்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் உரங்களுடன் சேர்த்து பிற பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயி களுக்கு வழங்கக்கூடாது என்றும், மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி, கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும் என்றும், குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு தகவல் தெரிவிக்க வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 3991.72 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 1723.275 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1264.45 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 10192.503 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 867.175 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களில் போதிய அளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன் படுத்துவதோடு, திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படு வதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள வேண்டும் என்றும் வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டத்திற்கு தட்டுப்பாடின்றி யூரியா உரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்த தமிழக முதல்-அமைச்சர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண்மை இயக்குநர், மாவட்ட கலெக்டர், வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) ஆகியோர்களுக்கு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Tags:    

Similar News