உள்ளூர் செய்திகள்

18 ஆயிரம் வீடுகளுக்கு இலவசமாக தேசிய கொடி

Published On 2022-08-06 09:36 GMT   |   Update On 2022-08-06 09:36 GMT
  • கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 18 ஆயிரம் வீடுகளுக்கு இலவசமாக தேசிய கொடிஇன்று முதல் வழங்கப்படுகிறது.
  • இக்கொடியினை அறிமுக–ப்படுத்தி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அலுவலரிடம் கொடிகளை வழங்கினார்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 75-வது சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் போது அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றுவதற்காக இலவசமாக வீடு தோறும் கொடி வழங்கும் நிகழ்வுக்காக நிதி சேகரிக்கப்பட்டது.

நகரில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலமாக ரூ.1 லட்சம் சேகரிக்கப்பட்டது. நகராட்சி அலுவலர்கள் தங்கள் பங்களிப்பாக ரூ 75 ஆயிரத்தை வழங்கினார்்கள். மேலும் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 18 ஆயிரம் கொடிகள் அச்சிடப்பட்டு நகராட்சி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.

இக்கொடியினை அறிமுக–ப்படுத்தி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அலுவலரிடம் கொடிகளை வழங்கினார்.

இன்று முதல் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வீடுகள் தோறும் தேசியக்கொடியை இலவசமாக வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், நகரமைப்பு அலுவலர் சேகரன், உதவி பொறியாளர்கள் கோமதி, ராஜேஷ், மேலாளர் ஜோதி–மணி ஆகியோர் மேற்பார்வை–யில் துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சவுந்தரராஜன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், நகரமைப்பு ஆய்வாளர் ஜானகிராமன் உள்ளிட்டவர்கள் தலைமையிலான குழுவினர் தேசிய கொடியினை வீடுகள் தோறும் வழங்க உள்ளனர்.

Tags:    

Similar News