உள்ளூர் செய்திகள்

கொடிவேரி அணையில் 2 நாளில் 20 ஆயிரத்து 500 பேர் குளித்து மகிழ்ந்தனர்

Published On 2023-05-29 06:41 GMT   |   Update On 2023-05-29 06:41 GMT
  • கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • கொடிவேரிக்கு அணைக்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

கோபி, 

கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

இதனால் கொடிவேரி அணையில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மேலும் விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் வருவார்கள்.

இந்த நிலையில் கோடை விடுமுறை மற்றும் வெயி லின் தாக்கத்தால் கடந்த 2 மாதமாக கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொடிவேரிக்கு அணைக்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணி கள் அதிகளவில் வந்தனர். இதே போல் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கொடிவேரி தடுப்பணைக்கு அதிகளவில் பொதுமக்கள் வந்திருந்தனர்.

மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. பொது மக்கள் பலர் கார், வேன், இருசக்கர வாகன ங்களில் வந்திருந்தனர்.

மேலும் ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திரு ந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மக்களின் கூட்டம் அலை மோதியது.

கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியாக காணப்பட்டது. கடும் வெயிலின் தாக்கத்தால் அவதிபட்டு வந்த பொதுமக்கள் கொடிவேரி பகுதி யில் குளிர்ந்த காற்று வீசியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

இதனால் கடந்த 2 நாட்க ளில் மட்டும் 20 ஆயிரத்து க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று முன்தினம் சனி க்கிழமை 6 ஆயிரத்து 500 பேரும், நேற்று ஞாயிற்றுக் கிழமை 14 ஆயிரம் பேர் என மொத்தம் 20 ஆயிரத்து 500 பேர் கொடிவேரி தடுப்பணையில் குவிந்தனர். இதன் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் நுழைவு கட்டணமாக ரூ.72 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News