உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 238 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

Published On 2023-11-09 07:30 GMT   |   Update On 2023-11-09 07:30 GMT
  • பட்டாசு கடைகள் அமைக்க 247 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
  • மாவட்டம் முழுவதும் 238 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடைவீதிகளில் ஜவுளி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதேபோல் பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அமைக்க மொத்தம் 247 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இதில் உரிய பாதுகாப்பு, பல்வேறு அம்சங்கள் இடம் பெறாத காரணத்தினால் 9 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 238 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது,

தீபாவளி பண்டிகையை மக்கள் பாதுகாப்பாக கொண்டாட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் 2 வாசல் கண்டிப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதேப்போல் பாதுகாப்பு உபகரணங்கள் கடையில் இருக்க வேண்டும்.

300 லிட்டர் அளவு தண்ணீர் சேமித்து வைத்தி ருக்க வேண்டும். தீயணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக புகை பிடித்தல் கூடாது போன்ற அறிவுரை பட்டாசு கடைக்காரர் களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

மேலும் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பட்டாசு எப்படி வெடிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் தினமும் காலை, மாலையில் தீயணைப்பு துறை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

வீடுகளுக்குள் வெடி எடுக்கக் கூடாது. குடிசை பகுதி, தென்னை மரம் அருகே ராக்கெட் வெடிக்க கூடாது போன்றவை அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News