உள்ளூர் செய்திகள்

கடைகளில் கொள்ளையடித்து கைதான 3 பேர் சிறையில் அடைப்பு

Published On 2023-03-17 09:57 GMT   |   Update On 2023-03-17 09:57 GMT
  • போலீசார் 3 பேரையும் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
  • தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 டி.என்.பாளையம்:

கோபிசெட்டிபாளையம் அடுத்த காசிபாளையம் மணியகாரன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஜெகதீஸ் (28) டி.ஜி.புதூரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து காலை கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 6 செல்போன்கள், ஒரு லேப்டாப் உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அதே போன்று டி.என்.பாளையம் குமரன் கோவில் ரோட்டை சேர்ந்த சதீஸ் (46). டி.என்.பாளையத்தில் வைத்துள்ள போட்டோ ஸ்டுடியோ கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கேமரா, கம்ப்யூட்டர் மானி ட்டர் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பங்களாப்புதூர் போலீசார் கொடிவேரி அணை அருகே சதுமுகை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்திய போது அவர்கள் தப்பியோட முயன்றனர்.

இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் டி.என்.பாளையம், டி.ஜி.புதூர் கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததும்,  அவர்கள் சிறுமுகையை சேர்ந்த 17 வயது சிறுவன் கோவை மாவட்டம் சிறுமுகை வடபகதூரை சேர்ந்த நித்தீஸ் (21), கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பாசரை புதுக்காலனியை சேர்ந்த விஜய் (23) என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரும் கோபி நீதிமன்றத்திலும், 17 வயது சிறுவன் கோவை சிறார் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News