அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது
- மலையம்பாளையம், சிறுவலூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 19 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மலையம்பாளையம், சிறுவலூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
அப்போது சின்னம்மா புரம், கெட்டிசெவியூர்-நம்பியூர் ரோடு, வெள்ளப்பம்பாளையம் எல்.பி.பி. வாய்க்கால் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த ஈரோடு புஞ்சை கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த வீரன் மகன் பெரியசாமி (வயது 53), கொடுமுடி இலுப்பு தோப்பு பகுதியை சேர்ந்த பால சுப்பிரமணியன் மகன் வினோத்குமார் (32), நம்பியூர் சூரியம்பாளையம் பழனி மகன் நாகராஜன் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 19 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் காஞ்சி கோவில்-பெருந்துறை ரோடு, இச்சிபாளையம் வாய்யக்கால் கரை பகுதியில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பெருந்துறை முள்ளம்பட்டி அடுத்த கண்ணவேலம் பாளைய த்தை சேர்ந்த மூர்த்தி (50), கொடுமுடி விருப்பம்பா ளையம் ராமகி ருஷ்ணன் மகன் சீனிவாசன் (28) ஆகி யோர் மீது காஞ்சி கோவில், கொடுமுடி போலீ சார் வழ க்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 16 மதுபாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்தி ற்காக மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சின்ன ப்பன் மகன் முருகன் (41) என்பவரை மலையம்பாளையம் போலீ சார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.