- ரவிச்சந்திரன் (27), சூரம்பட்டி வலசு, அண்ணா வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பது தெரியவந்தது.
- திருவண்ணாமலையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
ஈரோடு,
ஈரோடு சூரம்பட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சூரம்பட்டி வலசு, நேதாஜி ரோடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் 1.200 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணை யில் அவர்கள் வீரப்பன் சத்திரம் பகுதி யைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (27), சூரம்பட்டி வலசு, அண்ணா வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பது தெரியவந்தது.
மேலும் சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து ரூ. 24 ஆயிரம் மதிப்பிலான 1.200 கிலோ கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ. 700 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல, கடத்தூர் போலீசார், கோபியை அடுத்துள்ள சிங்கிரி பாளையம், மாதேஸ்வரன் தோட்டம் முன்பாக சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவர்கள் இருவரும் நம்பியூர் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (35), கோபி, ஒடையகவுண்ட ன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) என்பதும் தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ரூ. 3,000 மதிப்பிலான 100 கிராம் கஞ்சா, பணம் ரூ. 1,500 மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.