அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது
- அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறுவலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
கெட்டிசெவியூர், சாந்தகடை பகுதி அருகே ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரித்த போது அவர் நம்பியூர் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (34) என்பதும் அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கருங்கல்பாளையம், கொடுமுடி, கடம்பூர் பகுதிகளிலும் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.