உள்ளூர் செய்திகள்

பூனையை மீட்க சென்ற வாலிபர் கிணற்றில் விழுந்து பலி

Published On 2023-08-01 09:20 GMT   |   Update On 2023-08-01 09:20 GMT
  • கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்து இறந்து விட்டது.
  • ஆனந்த் கயிறு மூலம் மேலே ஏறிய போது கை நழுவி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

சென்னிமலை:

சென்னிமலை பி.ஆர்.எஸ்.ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கம்பெனி செயல்படுகிறது. இங்கு கொளத்தூர் சவேரியர்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த ஆனந்த் (35) என்பவர் தங்கி பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு கம்பெனி வளாகத்தில் உள்ள கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்து இறந்து விட்டது. இதனையடுத்து பூனையை கிணற்றில் இறங்கி எடுத்துள்ளார்.

பூனையினை எடுத்து விட்டு ஆனந்த் கயிறு மூலம் மேலே ஏறிய போது கை நழுவி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

பின்னர் உடனிருந்த ராஜேந்திரன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் ஆனந்தினை கிணற்றில் இருந்து மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலே ஆனந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News