தடுப்பு சுவரை இடித்து அந்தரத்தில் தொங்கிய சரக்கு வேன்
- வேன் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் தொங்கியது.
- இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவு உள்ளது. கர்நாடகா-தமிழகம் இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதி யாக திம்பம் மலைப்பகுதி விலங்கி வருகிறது.
இங்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அளவுக்கு அதிகமாக லோடுகளை ஏற்று வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பழுது ஏற்பட்டு நின்று விடுவதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்கதை ஆகி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை மைசூரில் இருந்து லோடுகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. 9-வது கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்பு சுவற்றை இடித்து கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
பின்னர் பண்ணாரியில் இருந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சரக்கு வேனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.