உள்ளூர் செய்திகள்

நீர்நிலை அருகே குப்பை கொட்டிய வியாபாரிக்கு ரூ.500 அபராதம்

Published On 2023-06-10 06:27 GMT   |   Update On 2023-06-10 06:27 GMT
  • தனது இரவு நேர கடையில் சேர்ந்த குப்பை களை கொட்டியுள்ளார்.
  • வீடியோவாக பதிவு செய்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினருக்கு அனுப்பியு ள்ளார்.

கோபி, 

கோபிசெட்டிபாளையம் நகராட்சி வார்டு எண் 16 வள்ளியம்மன் கோவில் வீதி பகுதியில் உள்ள நீர் ஓடை அருகே ஹரிநிவாஷ் என்பவர் தனது இரவு நேர கடையில் சேர்ந்த குப்பைகளை கொட்டியுள்ளார்.

இதனை அப்பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் ஏன் குப்பைகளை தெருவில் கொண்டுவந்து கொட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பின்னர் அவர் குப்பை களை கொட்டியதை வீடியோவாக பதிவு செய்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினருக்கு அனுப்பியு ள்ளார். நகர்மன்ற உறுப்பினர் ராமு நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ள வாட்ஸ் அப் குரூப்பில் இதை பகிர்ந்துள்ளார்.

இதைப்பார்த்த நகராட்சி பொது சுகாதார பிரிவு அலுவலர்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட நபரின் கடைக்கு சென்று அபரா தமாக ரூ.500 வசூலிக்க ப்பட்டது.

மேலும் நகராட்சி அதிகா ரிகள் கடைக்காரரிடம் தங்களது கடையில் சேகர மாகும் திடக்கழிவு களைமக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து நகராட்சி பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும். வீதியிலோ, நீர்நிலைகளிலோ கொட்டினால் உடனடி அபராதம் விதித்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்த னர்.

Tags:    

Similar News