லாரியில் இருந்து கீழே விழுந்த ராட்சத கிரானைட் கல்
- லாரியில் இருந்து ஒரு ராட்சத கிராணைட் கல் சாலையில் கீழே விழுந்தது.
- எந்த ஒரு வாகனமும் வராததால் விபத்துக்கள் எதுவும் நடைபெறவில்லை.
அந்தியூர்,
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. மேலும் இந்த வழியாக செல்வதனால் போக்குவரத்து தொலைவு குறைவாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்த டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து ராட்சத கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த கனரக லாரி மலைப்பாதையின் 2-வது வளைவில் திரும்பும் பொழுது லாரியில் இருந்து ஒரு ராட்சத கிராணைட் கல் சாலையில் கீழே விழுந்தது.
இதனையடுத்து டிரைவர் அந்த லாரியை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு அங்கேயே நின்றிருந்தார். அதிகாலை நேரம் என்பதா லும், லாரியின் பின்னால் எந்த ஒரு வாகனமும் வராததால் விபத்துக்கள் எதுவும் நடைபெறவில்லை.
மேலும் சாலை ஓரமாக இந்த கிரானைட் கல் விழுந்திருப்பதால் போக்கு வரத்து பாதிப்பு எதுவும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றது. தகவலை அறிந்த பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் தனபால், முருகன் உள்ளி ட்ட போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லை வண்டியில் ஏற்றும் பணி யில் ஈடுபட்டனர்.
மேலும் பொக்லைன் எந்திரத்தின் மூலமாக மட்டுமே இந்த கல்லை ஏற்ற முடியும் என்பதால் 2 வாகனங்களை வரவழைத்து ஏற்றும் பணி நடைபெற்றது.