உள்ளூர் செய்திகள்

பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2023-10-15 07:15 GMT   |   Update On 2023-10-15 07:15 GMT
  • சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
  • தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தது.

சென்னிமலை:

பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகா விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக கருதி பெருமாள் வழிபாடு செய்வர். பலரும் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்வது வழக்கம்.

புரட்டாசியில் வரும் சனிக்கிழமை மேலும் சிறப்பு வாய்ததாக கருதப்படுகிறது.

நேற்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை மற்றும் அமாவசையும் இணைந்து வந்ததால் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது.

இதனால் சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையம் ஆதிநாரயணப்பெருமாள் கோவிலில் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். 11 மணிக்கு பெருமாள் தாயாருடன் சகடை தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது.

சென்னிமலை டவுன் ஈங்கூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வ ரூப மகா விஷ்ணு ஆலயத்தில் காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணு விற்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

அதை தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முருங்கத்தொழுவு அணியரங்க பெருமாள் மலை கோவிலிலும் பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News