முதியவரிடம் ரூ.6,800 அபேஸ் செய்த மர்ம நபர்
- ஈரோடு பஸ் நிலையத்தில் திருச்சி பஸ் ரேக்கில் ஈரோட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.
- அவரது அருகே நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். சமீப காலமாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் பயணிகளிடம் செல்போன், பணம் திருடி கொண்டு செல்கின்றனர். குறிப்பாக முதியவர்களிடம் அதிக அளவில் கைவரிசை காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஈரோடு பஸ் நிலையத்தில் திருச்சி பஸ் ரேக்கில் ஈரோட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அவரது அருகே நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் முதியவரின் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.6,800 ரொக்க பணத்தை பாக்கெட்டில் பிளேடு போட்டு திருடி சென்றுள்ளார். பின்னர் முதியவர் தான் வைத்திருந்த பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அந்த முதியவர் ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள புறநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் போலீசார் முதியோரிடம் விசாரணை நடத்தி பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சியின் பதிவுகளை கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இதையடுத்து ஈரோடு பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.