ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டுயானை
- வாழைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சேதப்படுத்தியது.
- வனத்துறையினர் அகழி பராமரிப்பு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம் ஊராட்சியையொட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கள்ளிப்பட்டி அருகே உள்ள சுண்டக்கரடு மலை வாழ் மக்கள் காலனிக்குள் இரவு நேரங்களில் புகுந்து உலா வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கணக்கம்பாளையம் ஊரா ட்சி சுண்டக்கரடு பகுதியில் செந்தில் என்ற விவசாயி தனது 2½ ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு இருந்தார். 8 மாதங்களே ஆன வாழைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சேதப்படுத்தியது.
கடந்த 10 நாட்களாக கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம் ஊராட்சி வன எல்லையில் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வரும் தனியார் சிலரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை பயிர்க ளை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
வனப்பகுதியில் இருந்து சுண்டக்கரடு பகுதியில் உள்ள ஊருக்குள் யானை செல்லா மல் இருக்க வனத்துறையின ரால் அகழி தோண்டப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் பாறை பகுதி உள்ளதால் அகழி தோண்டப்படாத தாலும், அகழி முற்புதர்களால் மண் மூடி கிடப்பதாலும் பராமரிப்பு இன்றி காணப்படு வதால் வன எல்லையில் இருந்து காட்டு யானை ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக விவசா யிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே காட்டு யானை ஊருக்குள் புகாமலும், விவ சாய பயிர்களை சேதப்படு த்தாத வகையிலும் அகழிகளை பராமரிப்பு செய்ய வேண்டும் என்றும் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு, ஊர்ப்பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேரில் சம்பவ இடத்திற்கு சென்ற டி.என்.பாளையம் வனத்துறை யினர் அகழி பராமரிப்பு செய்து நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்து சென்றனர்.