உள்ளூர் செய்திகள்

அந்தியூர் பவானி ரோட்டில் கட்டி முடிக்கப்படாமல் உள்ள கழிவு நீர் வடிகால்.

புதியதாக கட்டப்பட்டு வரும் கழிவு நீர் வடிகால் பாதியில் நிறுத்தம்

Published On 2023-04-02 09:29 GMT   |   Update On 2023-04-02 09:29 GMT
  • கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.
  • கழிவுநீர் வடிகால் முழுமையாக கட்டாமல் இடையில் அப்படியே உள்ளது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து பவானி ரோடு அண்ணா மடுவு வரை சாலை விரிவாக்க பணி கடந்த 6 மாத காலமாக நடைபெற்று வருகிறது.

மேலும் ரோட்டின் 2 பகுதிகளிலும் மழை நீர், கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இந்த நிலையில் அந்தியூர் பவானி ரோடு ஸ்டேட் வங்கி எதிர்புறம் கழிவுநீர் வடிகால் முழுமையாக கட்டாமல் இடையில் ஒரு பகுதி விடப்பட்ட நிலையில் அப்படியே உள்ளது.

இதனால் மழைக் கால ங்களில் தண்ணீர் பெருக்கெ டுத்து சாலையில் தேங்கி நிற்கும் நிலை ஏறபட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும் கழிவுநீர் சாலையில் தேங்கி நின்றால் துர்நாற்றம் மற்றும் கொசுத் தொல்லைகளால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் இருப்பதனால் இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ள கழிவு நீர் வடிகால் கட்டும் பணியை விரைந்து முழுமையாக முடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுக்கி ன்ற னர்.

Tags:    

Similar News