உள்ளூர் செய்திகள்

விபத்தில் காயம் அடைந்த டிரைவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காட்சி.

தவிடு ஏற்றி வந்த வேன் மரத்தில் மோதி விபத்து

Published On 2023-03-24 07:59 GMT   |   Update On 2023-03-24 07:59 GMT
  • டெம்போ வேன் ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
  • இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பர்கூர் வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை அமைந்துள்ளது.

இந்த வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு செல்ல குறைந்த தூரம் என்பதாலும், 2 கொண்டை ஊசி வளைவுகள் மட்டுமே இருப்பதாலும் பெரு ம்பாலான வாகன ஓட்டிகள் இந்த வழியாக சென்று வருகிறார்கள்.

தற்போது சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர் .

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து தவிடு பாரம் ஏற்றி கொண்டு ஒரு டெம்போ வேன் பெருந்துறையில் தவுடுகளை இறக்குவதற்காக பர்கூர் வனப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தது.

அப்போது வேலாம்பட்டி பிரிவு என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென டெம்போ வேன் ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் டெம்போ வேனில் வந்த கர்நாடக மாநிலம் அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் அமிர்தலிங்கம் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கிளீனர் கார்த்தி (22) ஆகியோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

இது குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை ஆம்புலன்சு மூலம் மீட்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Tags:    

Similar News