- முருகப்பெருமானுக்கு காலை 7 மணிக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம் நடந்தது.
- ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, தேவார, நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
சென்னிமலை,
சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழாவை முன்னிட்டு நேற்று நடந்த ஸ்ரீ சுப்பிரமண்ய ஜெப பாரா யணம் ஹோமம் பூஜை களில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 40 -– வது ஆண்டாக நடந்த மூன்று நாள் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமானுக்கு காலை 7 மணிக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து வேதிகா அர்ச்சனையும், 1008 கலச அபிஷேகம் மற்றும் ஸ்ரீ மஹா ஜெய விஜய ஸ்ரீ சுப்பிரமண்ய ஜெப பாராயணம் ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, தேவார, நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
பிறகு பகல் 12 மணிக்கு மேல் மகா தீபாராதனையும், அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்தி புறப்பாடும் நடை பெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் பக்தர்களுக்கு சுப்புசாமி அருள் பிரசாதம் வழங்கினார், அன்னதான மும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.