வேளாண் கல்லூரி மாணவிகள் தூய்மை பணி
- அந்தியூர் வட்டாரத்தில் வேளாண்மை அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து வருகின்றனர்.
- பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணியிலும் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டு சிறப்பான முறையில் செய்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரத்தில் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியை சேர்ந்த 4-ம் ஆண்டு மாணவிகள் தங்கள் திட்டத்தின் கீழ் 75 நாட்கள்அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து வருகின்றனர்.
விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை கற்று கொடுத்தல், மண் மாதிரி எடுத்தல், ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை, வாழைக்கன்று நேர்த்தி பண்ணை, குட்டை அமைத்தல், சூரிய ஒளி உலர்த்தி, உயிர் உரம் ஆகியவற்றை பற்றி விவசாயிகளிடத்தில் எடுத்து கூறும் வகையில் பச்சாம்பாளையம், கீழ்வாணி, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விவசாயிகளிடத்தில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
மேலும் அந்தியூரில் புகழ் பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணியிலும் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டு சிறப்பான முறையில் செய்தனர்.
இதில் காவியா, கீர்த்தனா, கவுசல்யா, காவியாஸ்ரீ, மதிமிதா, கீர்த்தனா, மாளவிகா, கவுசல்யா, மரியா தெரஸ்மனோஜ், மேக்னா விஸ்வின், மோனிகா உள்ளிட்ட மாணவிகள் செய்திருந்தார்கள்.