உள்ளூர் செய்திகள்

பண்ணாரியம்மன் சப்பரம் இக்கரை தட்டப்பள்ளியில் இருந்து அக்கரை தட்டப்பள்ளிக்கு பரிசலில் ஆற்றை கடந்து சென்ற காட்சி.

ஆற்றை கடந்து அக்கரை தட்டப்பள்ளிக்கு சென்ற அம்மன் சப்பரம்

Published On 2023-03-25 08:06 GMT   |   Update On 2023-03-25 08:06 GMT
  • அக்கரை தட்டப்பள்ளி மாரியம்மன் கோவிலில் சப்பரம் திருவீதி உலா புறப்பட்டது.
  • இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது.

விழாவையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

விழாவையொட்டி கடந்த 3 நாட்களுக்கு முன்பு பண்ணாரியம்மன் சப்பரம் திருவீதி உலா தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மன் சத்தியமங்கலத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் திருவீதி உலா நடந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுகிறார்கள்.

இதை தொடர்ந்து நேற்று இக்கரை தட்டப்பள்ளிக்கு சப்பரம் சென்றது. தொடர்ந்து அங்கு அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று இரவு வெள்ளியம்புதூரில் இருந்து சப்பரம் புறப்பட்டு பவானி ஆற்றை கடந்து அக்கரை தட்டப்பள்ளி மாரியம்மன் கோவிலுக்கு வந்தது.

இதை தொடர்ந்து இன்று காலை அக்கரை தட்டப்பள்ளி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சப்பரம் திருவீதி உலா புறப்பட்டது.

இதையடுத்து சுற்று வட்டார பகுதி கிராமங்களில் அம்மன் சப்பரம் திருவீதி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். மேலும் பலர் அம்மன் சப்பரம் முன்பு படுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

இதை தொடர்ந்து இன்று இரவு பண்ணாரிம்மன் சப்பரம் சத்தியமங்கலம் மாரியம்மன் கோவிலுக்கு வருகிறது. இதையடுத்து நாளை காலை சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் அம்மன் சப்பரம் வீதி உலா நடக்கிறது.

Tags:    

Similar News