பெட்ரோல் பங்கில் பணம் திருடிய ஊழியர் கைது
- பங்கில் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ.2 ஆயிரம் பற்றாக்குறை இருந்துள்ளது.
- ஹரினிடம் பண பற்றாக்குறை பற்றி கேட்ட போது மது குடிக்க கல்லாவில் இருந்து ரூ.2ஆயிரம் எடுத்து வந்து விட்டதாக கூறியுள்ளார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோயில் தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சசிகுமார் (வயது43).
இந்த பங்கில் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ.2 ஆயிரம் பற்றாக்குறை இருந்துள்ளது. பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை கேட்டபோது தாங்களுக்கு தெரியாது என்றும் கேசியரை தான் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
வேலை முடித்து சென்ற ஊழியர் ஹரின் என்பவரை தேடி வீட்டிற்கு சென்ற போது அங்கு அவர் இல்லை. பின்னர் மதியம் காஞ்சிக்கோயில் நால் ரோட்டில் நின்று கொண்டி ருந்த ஹரினிடம் பண பற்றாக்குறை பற்றி கேட்ட போது மது போதையில் இன்று விடுமுறை என்ப தால் மது குடிக்க கல்லாவில் இருந்து ரூ.2ஆயிரம் எடுத்து வந்து விட்டதாக கூறியு ள்ளார்.
அவரிடம் பாக்கெட்டில் மீதம் இருந்த ரூ.1600 எடுத்து கொடுத்து கொண்டார். பின்னர் இது குறித்து காஞ்சிக்கோயில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொட ர்பாக காஞ்சிக்கோயில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்கு பதிந்து ஹரினை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.