உள்ளூர் செய்திகள்

அந்தியூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம்

Published On 2022-06-30 09:25 GMT   |   Update On 2022-06-30 09:25 GMT
  • அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் வேண்டி திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அவசர சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

அந்தியூர்:

அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் வேண்டி திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிட பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் சுப்பராயன் எம்.பி. முன்னிலையில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அவசர சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி, தலைமை டாக்டர் விஸ்வேஸ்வரன், டாக்டர்கள் செல்வம், சுரேந்திரன், விஜயா, கலைவாணி, ஆத்மாதன், ராம்குமார், தலைமை செவிலியர் மலர்விழி, அல்ட்ரா தொண்டு நிறுவன நிறுவனர் தண்டாயுதபாணி, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் நாகராஜா, வட்டாரத் தலைவர் பழனிமுத்து, நகர தலைவர் ஜலாலுதீன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்டர் கவிதா அனைவரையும் வரவேற்றார்.

Tags:    

Similar News