உள்ளூர் செய்திகள்

அத்தனூர் அம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2023-10-15 07:07 GMT   |   Update On 2023-10-15 07:07 GMT
  • பூச்சாட்டுகளுடன் திருவிழா தொடங்கியது.
  • பொங்கல் வைத்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.

பு.புளியம்பட்டி:

புஞ்சைபுளியம்பட்டி அடுத்து நம்பியூர் சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ அத்தனூர் அம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளது.

இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாட்டுகளுடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் அத்தனூர் அம்மன் கோவில் முன்பு அதிகாலை எருமை கிடாயினை வெளியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

அதைக்கண்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக புளியம்பட்டி, குட்டகம், மாதம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

விழாவினை புளியம்பட்டி இளங்காளி கவுடர் மற்றும் பூசாரி கவுடர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நாளை இரவு கம்பம் நடப்பட்டு திருவிழாவானது தொடர்ந்து நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News