தண்ணீர் வெளியேறியதால் படகு போக்குவரத்து நிறுத்தம்
- நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
- இதனால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அம்மாபேட்டை:
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை உள்ளிட்ட கதவணை மின் நிலையங்களில் வருடாந்திர பராமரிப்பு பணி வருடத்திற்கு ஒரு முறை ஏப்ரல், மே மாதங்களில் நடப்பது வழக்கம்.
இந்த வருடம் கடந்த மாதத்தில் ஊராட்சி கோட்டை, கோனேரிப்பட்டி ஆகிய கதவணை மின் நிலையங்களில் பராமரிப்பு நிறைவுற்ற பின் நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை மற்றும் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு இடையேயான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் நெரிஞ்சிப்பேட்டை கதவணை பாலம் வழியாக சுமார் 8 கி.மீ. சுற்றி செல்கின்றனர்.
மேலும் கதவணையின் மேல் நீரேற்று நிலையம் அமைந்துள்ள பகுதியில் தண்ணீர் வறண்டதால் நீரேற்ற முடியாமல் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் செய்ய சில நாட்கள் ஆகும் என தெரிகிறது.