அனுமதியின்றி மது விற்ற 9 பேர் மீது வழக்கு
- 48 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி, பெருந்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெருந்துறை, பவானி, பங்களாபுதூர், புளியம்பட்டி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் பருத்தி கண்மாய் பகுதியை சேர்ந்தவர் பஞ்சு மகன் ராஜ்குமார் (வயது 42), கோவை மாவட்டம் தெலுங்கு பாளையத்தை சேர்ந்த மணிமாறன் மகன் ஸ்ரீதர் (32),
பவானி ஈஸ்வரன் கோவில் பகுதி யைச் சேர்ந்த சின்னப்பி ள்ளை என்ற ருக்மணி (70), பங்களாபுதூர் கொங்க ர்பாளையத்தை சேர்ந்த பொன்னக்கால் (60), அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் (32), நேதாஜி நகரைச் சேர்ந்த சுப்ரமணி மகன் காளிமுத்து (29), கடையா ம்பாளையம் முருகன் மனைவி செல்வி (50), கணக்கம்பாளையம் பாரதி தெரு ஆபிரகாம் (50), பவானிசாகர் தொப்பம்பாளையம் அனுமந்தன் மகன் மாரப்பன் என்ற மாறன் (40) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.
பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 48 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் இடையா ம்பாளையம் பகுதியில் பொது இடத்தில் மது அரு ந்திய குற்றத்திற்காக கட த்தூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் சந்தோஷ்கு மார் (27) என்ப வர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.