உள்ளூர் செய்திகள்

சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

Published On 2023-11-02 09:21 GMT   |   Update On 2023-11-02 09:21 GMT
  • பொங்கல் விழா காலை தொடங்கி நடந்தது.
  • பக்தர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து மாரியம்மனை வழிபாடு செய்தனர்.

சென்னிமலை:

சென்னிமலை டவுன் காங்கேயம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 15 நாள் பொங்கல் வைபோகம் சிறப்பாக கொண்டாடப்படும் . இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதல் நிக ழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடர்ந்து 25-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வந்தது.

கம்பத்திற்கு தினமும் பெண்கள் பயபக்தியுடன் மஞ்சள் நீர் ஊற்றியும், கம்பத்திற்கு வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தினர்.

வேண்டுதல்காரர்கள் அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தி வந்தனர். தினமும் இரவு மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா காட்சியும் நடந்தது.

இதனை தொடர்ந்து நேற்று இரவு மாவிளக்கு ஊர்வலமும் சிறப்பு பூஜையும் நடந்தது. இன்று பொங்கல் விழா காலை 7 மணிக்கு தொடங்கி நடந்தது.

பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலி கொடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் பக்தி பரவ சத்துடன் மாரியம்மனை வழிபாடு செய்தனர். நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் கோவில் தலைமை பூசாரி வாசுதேவன், புலவர் அறிவு, மற்றும் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Tags:    

Similar News