சென்னிமலை முருகன் கோவிலில் பிரசாத கடை ரூ.15.50 லட்சத்திற்கு ஏலம்
- சென்னிமலை முருகன் கோவிலில் பிரசாத கடை ரூ. 15 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் முடியினை சேகரித்து கொள்ள ஒரு வருடத்திற்கு ரூ.66 ஆயிரத்து 200 ஏலம் போனது.
- இதேபோல் மலை மீது பூக்கடை, தேங்காய், பழம் விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏலம் குறைவாக கேட்டதால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டத்தின் புகழ் பெற்ற மலை கோவிலாக விளங்கும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து முருகப்பெ ருமானை வழிபட்டு செல்கி ன்றனர். இந்த கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.3 கோடியே 40 லட்சம் ஆகும்.
இந்நிலையில் சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில் சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் விற்பனை செய்து கொள்ளும் கடை ஒரு வருடத்திற்கு நடத்த தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் ஏலம் நடந்தது.
இதில் பிரசாத கடை ரூ. 15 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் முடியினை சேகரித்து கொள்ள ஒரு வருடத்திற்கு ரூ.66 ஆயிரத்து 200 ஏலம் போனது.
இதேபோல் மலை மீது பூக்கடை, தேங்காய், பழம் விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏலம் குறைவாக கேட்டதால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.