உள்ளூர் செய்திகள்

வேகமாக வந்த டிப்பர் லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்

Published On 2023-02-22 09:54 GMT   |   Update On 2023-02-22 09:54 GMT
  • அதிக பாரம் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரியை வேகமாக ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.
  • இதையடுத்து அவர்கள் லாரியை பறிமுதல் செய்தனர்.

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி கொண்டு ஒரு டிப்பர் லாரி வந்து கொண்டு இருந்தது.

அந்த டிப்பர் லாரி வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட பொதுமக்கள் அந்த பகுதி யில் உள்ள ஒரு பள்ளியின் அருகே வந்த போது டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சிறை பிடித்தனர்.

இது குறித்து நம்பியூர் தாலுகா அஞ்சனூர் கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் நில வருவாய் அலுவலர் ராஜாமணி ஆகியோருக்கு தகவல் தெரிந்தது.

இதை யடுத்து நிலவருவாய் ஆய்வாளர் ராஜாமணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து டிப்பர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் டிப்பர் லாரியின் டிரைவர் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு லாரியை வேகமாக ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் லாரியை பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து வேமண்டம்பாளையம் நில வருவாய் ஆய்வாளர் ராஜா மணி நம்பியூர் தாசில்தாரி டம் பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரியை ஒப்படைத்தனர்.

அதிக பாரம் ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிப்பர் லாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் பெரியசாமி உறுதி அளித்தார். இதை யடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News